| 245 | : | _ _ |a கூத்தனூர்ச் செப்பேடு - |
| 300 | : | _ _ |a 36.5 செ.மீ x 21.5 செ.மீ |
| 500 | : | _ _ |a ராசா விசைய ரெகுநாத பாதர் தொண்டைமானார் 1.12.1800 அன்று தம் ஆட்சியில் கானாட்டுப் பகுதிக்குச் சுபேதாராக விளங்கிய செங்கமலம்பிள்ளை மகன் அடப்பங்கூத்தப்பன் பெயரில் சைவர்களுக்கு முத்திநகராகத் திகழும் தலம் காசியில் செய்த சில கொடைகளை இச்செப்பேடு விளக்குகிறது. காசியில் கங்காதீரக் கரையில் சோமேசுவரக் கட்டத்தில் தர்மசாலை சத்திரம் ரூபாய் 1250 செலவில் கட்டப்பட்டது. காசி விசுவநாதர் விசாலாட்சியம்மன் அபிஷேகம், நைவேதனம், வில்வார்ச்சனை, திருவிளக்குக் கட்டளைகள் நாள்தோறும் 1.25 பணம் செலவில் நடத்தப்பட்டது. நாள்தோறும் ஆறுபேருக்கு அன்னதான தர்ம் நடைபெற்றுவர மூலப்பொருளாக ரூபாய் 625 அளிக்கப்பட்டது. சோமேசுரக் கட்டத்தில் கட்டப்பட்ட சத்திரத்துக்கு கொவ்வனூருக்கு உள்கடையான கூத்தனூரில் பரந்தலைவயல், புதுவயல், நன்செய், புன்செய் விடப்பட்டது. இவையனைத்தும் தருமபுரம் திருஞானசம்மந்த தேசிகர் சீடரான காசிவாசி சடையப்பத் தம்பிரான் அவர்கள் வசம் அளிக்கப்பட்டது. கொடையாக அளிக்கப்பெற்ற நிலங்களுக்கு எல்லையாக வாழைக்குறிச்சி புலவன் புன்செய், வான முத்திரைக்கல், புனங்கி புன்செய், அனாதிகளர், பொன்னமராபதிப் பாதை, பூவாலைக்குடி, பள்ளன்ஊறணி, மாணிக்க நாச்சியார் ஊறணி ஆகியன கூறப்படுகின்றன. |
| 510 | : | _ _ |a செ.இராசு, திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், கொங்கு ஆய்வு மையம், |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ், கிரந்தம் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், திருப்பனந்தாள், திருவிடைமருதூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை தொண்டைமான்கள், விசைய ரகுநாத தொண்டைமான், கூத்தனூர் |
| 752 | : | _ _ |a கூத்தனூர் |c திருப்பனந்தாள் |d தஞ்சாவூர் |f திருவிடைமருதூர் |
| 905 | : | _ _ |a புதுக்கோட்டைத் தொண்டைமான் / விசைய ரகுநாத ராய பாதர் தொண்டைமானார் |
| 906 | : | _ _ |a 1.12.1800 |
| 914 | : | _ _ |a 11.09156091 |
| 915 | : | _ _ |a 79.45621786 |
| 925 | : | _ _ |a 36.5 செ.மீ x 21.5 செ.மீ |
| 995 | : | _ _ |a TVA_CPS_00158 |
| barcode | : | TVA_CPS_00158 |
| book category | : | பிற செப்பேடுகள் |
| cover | : |
|
| Primary File | : |